பறவை மனிதன் – அப்பாஸ் இப்னு பிர்னாஸ்

 

பறவையைப் போல் ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது


இன்று வேண்டுமானால் வானத்தில் ஆகாசமாக மனிதன் பறப்பது இலகுவாக இருக்கலாம். ஆனால் உலகம் தோன்றியது முதல் எத்தனை மனிதர்கள் இதை யோசித்து இருந்திருப்பார்கள்.

 

அப்படியாயின், கி.பி க்குப் பிறகு,

 

முதன் முதலில் வானத்தில் பறந்த  அல்லது பறக்க  முயற்சி செய்தவர்களின் பட்டியல் எடுத்தால் அது டாவின்சி, எல்மர் ரைட் பிரதர்ஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

 

ஆனால் இவையெல்லாம் கி பி பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான்,

 

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்ற ஒற்றை வசனத்தில் விமான கண்டுபிடிப்பை கூற முடியும் எனில் அதை முழுமையாக மனித வரலாற்றில் பறந்து காட்டிய முதல் மனிதன்.



 

கி.பி 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ்.

 

அப்பாஸ் இப்னு பிர்னாஸ் பறவையின் இறகுகளைப் போல், பாகங்களை உருவாக்கி தன்னுடைய உடலை அந்த இறகுகள் வானத்தில் தாங்குவது போல் உலகத்தின் முதல் விமானத்தை உருவாக்கினார்.

 

இவ்வளவு அழகான பறவை மனிதனை காற்றில் சுமந்து செல்லும் இறகுகளை உருவாக்குவதற்கு நுணுக்கமான அறிவியல், கணித எண்கள், தட்பவெட்ப நிலை, காற்றின் வேகம் போன்றவற்றை  உள்ளடக்கிய ஆராய்ச்சி தேவை. உண்மையில்  பிர்னாஸ்  உருவாக்கிய இறகுகள்  இந்த கணிதங்களின்  அடிப்படையில் உருவானதே.



 

அதற்கு அவர் எழுதிய அறிவியல் ஆராய்ச்சி புத்தகங்களே சாட்சி

 

மேலும், அதற்கான அறிவியல் படிப்புகளை அன்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அல்-ஹிக்மா பல்கலைக்கழகத்தில்  வானவியல், பொருளியல் போன்ற படிப்புகளில் முறையாக தேர்ச்சி பெற்றிருந்தார்.

 

அப்பாஸ் இப்னு பிர்னாஸ் தன்னுடைய 65 வது வயதில், தான் உருவாக்கிய விமான பாகத்தை எடுத்துக் கொண்டு தன் பகுதியில் இருக்கும் உயரமான மலைக்கு ஏறி பறக்கத் துவங்கினார்

 

முதல் மனிதப் பறவை வானில் பறக்கத் துவங்கியது.. மக்கள் தாங்கள் கண்ட காட்சிகளை தங்கள் கண்களால்  நம்பமுடியாமல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த அழகான 65 வயது பறவை தரையை நெருங்கும் போது நிலத்தில் மோதி அதன் இறகுகள் உடைகின்றன. இறகோடு சேர்ந்து அவரின் முதுகெலும்பும் முறிகிறது.

 

பிர்னாஸ், தன்னால் பறவை போல் பறக்க வடிவமைக்கப்பட்ட பாகங்களால்  தரையிறங்க பயன்படுத்த முடியாது என்று கற்றுக் கொள்கிறார்.

 

இந்த விபத்து இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்க முடியாதபடி அந்த அவரை முடக்கியது.

 

அடுத்த 10 ஆண்டுகளில்  அவரின் உடல் நிலை பலவீனம் அடைந்து மரணத்தைத் தழுவுகிறார்

 

ஆனால், இந்த பறக்கும் முயற்சியால் ஒரு விடயத்தை இந்த உலகிற்கு விட்டுசென்றார். அது, பறவை தரையிறங்க தனது வால் பகுதியை  பயன்படுத்தி இருக்க வேண்டும். பின்னாளில் இந்த ஆராய்ச்சி தனித் துறையாக வளர்ந்து விமானங்கள் தரையிறங்க வழிவகுத்தது.

இவரின் இந்த அறிய முயற்சியே பின்னாளில் ஐரோப்பிய அறிஞர்களுக்கு பறவையின் பாகங்களை முன்மாதிரியாக வைத்து விமானம் தயாரிக்கும் முயற்சிக்கு வித்திட்டது.

 

இன்றைய நவீன விமானத்தின் வடிவமைப்பை முதன் முதலில் உருவாக்கியவர் அப்பாஸ் இப்னு பிரானால் என அறிவியல் உலகம் இவரை அறிமுகப் படுத்துகிறது.

 

Ref : Ibn Firnas and His Contribution to the Aviation Technology of the World

Advances in Natural and Applied Sciences, 7(1): 74-78, 2013

ISSN 1995-0772

 

http://news.bbc.co.uk/2/hi/uk_news/8472111.stm

 

 

 

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...