ஒரு கப் காப்பியின் கதை


காப்பியை அதிகம் விரும்புபவர்களா நீங்கள். அது எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?.

பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், எத்தியோப்பியா நாட்டில் காலித் என்ற ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன், தன்னுடைய ஆடுகள் ஒரு குறிப்பிட்ட வகை செடிகளை உண்டவுடன் மிகவும் சுறுசுறுப்பாக திரிவதைக் கண்டான். .

பின்னாட்களில், அந்த செடிகளின்  விதைகள் அங்குள்ள நகர மக்களால்  மேலாண்மை செய்யப்பட்டு அல் கஹ்வா எனும்  பானமாக  மாற்றப்பட்து., அப்பானம் முதன் முதலில் இரவு நேரங்களில் இஸ்லாமிய வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புத்துனர்வுக்காக அளிக்கப் பட்டு வந்தது.

பின்னர், வணிகர்கள், .யாத்ரீகர்கள்  மற்றும் பயணிகளின் மூலம் 15ம் நூற்றாண்டில் மக்கா மற்றும் துருக்கிக்கும் 16ம் நூற்றாண்டில் கேய்ரோவிர்க்கும் கொண்டு செல்லப் பட்டு அங்கு பிரபலமடைந்தது.



கி பி 1650 ல் ரோசி என்ற வணிகரால் இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஐரோப்பிய மக்களுக்கு  பிடித்த பானமாக மாறிப் போனது. கி.பி 1700 ல் இலண்டனில் ஏறத்தாழ 500 காப்பி ஷாப்களும், 3000  காப்பிஷாப் கள் ஒட்டு மொத்த இங்கிலாந்திலும் செயல்பட்டு வந்தததாக வரலாறு கூறுகிறது. குறிப்பாக,  17 ம் நூற்றாண்டின் இறுதியில் இலண்டனில் துவங்கப்பட்ட லாய்ட்ஸ் காப்பி ஹவுஸ் கப்பல் முதலாளிகளும் வணிகர்களும் சந்திக்கும் வியாபார கூடமாக மாறி இருந்தது.

பின், வெனிஸ் நகர மக்களுக்கு கி.பி 1683 ல் துருக்கியுடன் நடந்த யுத்தத்தின் மூலம் காப்பி கிடைக்கப் பெற்றது.. ஆனால் அதன் அடர்த்தி அவர்கள் அருந்துவதற்கு மிக திடமாக இருந்த காரணத்தால்  காப்பியுடன் அவர்கள் சிறுது க்ரீமை சேர்த்து பருக  துவங்கினார்கள். அவர்கள் பருகிய காப்பியின் வண்ணம் காப்பசினோ சபையினர் அணியும்  அங்கியின் நிறத்தை ஒத்திருந்ததால்  சபையை  கவுரவிக்கும் விதமாக கேப்பக்சினோ காப்பி என்று அதற்கு பெயரிட்டார்கள்.

இன்று உலக அளவில் நாள் ஒன்றுக்கு 1600 மில்லியன் கப் காப்பி அருந்தப் பட்டு வருகிறது. எண்ணெய் சந்தைக்கு அடுத்த இடத்தில் உள்ளதும் இந்த காப்பி சந்தைதான்.

Ref : https://www.1001inventions.com/

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...