ஜாதி எங்கு இருக்கிறது?

 

ஜாதிய அமைப்பிற்கும், அடையாளப் படுத்தப் படுவதிர்க்கும் வித்தியாசம் இருக்கிறது. உாரணமாக மலைப்பகுதிகளில் வாழ்பவர்களை மலை வாழ் மக்கள் என்று தான் சொல்ல முடியும்.

அவர்கள் பள்ளி வாசலுக்கு வந்தால் ஒரே வரிசையில் தான் மற்றவர்களுடன் நிற்பார்கள்.

வசிக்கும் இடத்தை சுட்டியோ, வியாபாரத்தை சுட்டியோ, படிப்பை (நாம் டாக்டர் வக்கீல் என்று வைத்துள்ளவை இந்தக்கால தொழிலே ஆகும்.). சுட்டியோ அடையாளப் படுத்தும்.முறை எப்பொழுதும் உண்டு. ஆனால் அவை மக்களிடம் ஜாதிய அடையாளமாக, குடும்பத் தொழிலாக நிலை நிறுத்தப் படக் கூடாது.

இஸ்லாம் இந்த அடையாளத்தை ஏற்ற தாழ்வாக அமைக்காமல் ஒரே சமூகமாக மாற்றி, ஒவ்வொருவர் மனதிலும்  தொழ்கையின் மூலம் இறைவன் முன் அனைவரும் சமம் என்று பசுமரத்தாணி போல் பதிய செய்கிறது.

அதிகம் பயபக்தி உடையவர் உங்களில் கண்ணியமானவர் என்றும், அவர் யார் என்று இறைவனே அறிவான், அவர் நீங்களாகவோ அல்லது உங்கள் அருகில் தொழுது கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஏழை மனிதனாக வோ கூட இருக்கலாம் என்கிறது.

“மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண் மற்றும் பெண்ணில் இருந்துதான் படைத்தோம்... உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானவர் ஆவார்” (திருக்குர்ஆன்-49:13)

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...