உமர் (ரழி) வரலாறு

 

தொடர் 1: எல்லாப் புகழும் இறைவனுக்கே.


எல்லாம் சரியாக இருக்கிறதுஇ


கிளம்பி விட வேண்டியதுதான் மக்காவிலிருந்து அபிசீனியாவிற்குஇ பின்னே!இ இஸ்லாம் முன் வைக்கப்படும்போது அதை நிராகரிக்க என்ன காரணம் இருக்கப் போகிறதுஇஏற்றுக்கொண்டாயிற்று சரிஇஇஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இதை எதிர்ப்பவர்கள் சும்மா விடுவார்களா என்ன?.அடிஇ உதை எல்லாமே..அடிமையாக இருந்தால் தெருத்தெருவாக கட்டி இழுத்துச்செல்லப்பட்டு... ஏன்?இ கொலையும் செய்யக்கூட முன் வருவார்கள் அவர்கள்.


அபிசீனியாஇ

கொஞ்சம் பாதுகாப்பான இடம்.இறைவனின் தூதர் முஹம்மது(ஸல்) அனுமதி 

அளித்தப்பின் புறப்படத் தயாராகி கொண்டிருந்தார்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த உமருடைய உறவு பெண்ணான கத்தமாவும்(ரழி) அவருடைய கணவரும்.


யாரோ வருவது போல் சத்தம்இஇ


எட்டிப்பார்த்த கத்தமாவும் அவரது கணவரும் திகைத்து நின்றனர்.


ஆம்இ வந்தவர் உமர்.


அதுவும் கையில் வாளோடுஇ


யார் கண்ணில் படக்கூடாது என்று நினைதிருந்தார்களோ அதே உமர்.


எங்கே யார் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் அவர்களை தடுத்து நிருத்தக்கிளம்பி விடுவார்.அன்றைய நாளில் இஸ்லாத்தின் கடுமையான எதிரி.தன்னுடைய அடிமை இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்று தெரிய வந்த நாளிலிருந்தே இன்று வரைஇஅவ்வடிமையை மயக்கமாகும் வரை அடித்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்.


அடிமையும் மாறவில்லைஇ இவரும் விடவில்லை.


எங்கே கிளம்பிகொடிருக்கிர்ர்கள்?.கத்தமாவிடம் கேட்டார் உமர்.


கத்தமாவிடம் இருந்து பதில் வந்தது.


‘இறைவன் மீது ஆணையாகஇஇஸ்லாத்தை ஏற்றதற்காக வாழ்கையை இங்கே மக்காவில் மிக சிரமமானதாக ஆக்கிவிட்டார்கள்.எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள இங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.


கத்தமாவேஇஇறைவன் உம்மை பாதுகாக்கட்டும்.நீங்கள் அமைதியுடன் செல்லுங்கள்.


கத்தமாவிற்கு ஒன்றும் புரியவில்லை.


உமரா இதுஇநேற்றுவரை இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்.இன்று நமக்கு வாழ்த்து கூறுகிறார்.


இஸ்லாத்தை யாராவது ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரிய வந்தால் எப்படியும் அவர்களை மாற்றி விட வேண்டும் என  நினைப்பவர்.இன்றுஇநாம் இஸ்லாத்தை தழுவினோம் என்று தெரிந்தும் நம்மை வாழ்த்தி வழியனுப்புகிர்ரர்.


நிச்சயமாகஇ உமர் உள்ளத்தில் ஏதோ மாற்றம் வந்திருக்கிறது.இறைவன்  நாடினால் உமர் இஸ்லாத்தை தழுவும் நாள் வெகு தூரத்திலில்லை.


எல்லாப் புகழும் இறைவனுக்கே.


அணைத்து தொடர்களையும் படிக்கஇ

https://umarvaralaaru.blogspot.com/

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...