பெண்மையைப் போற்று!

 

பெண்மையைப் போற்று!

எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சுதந்திரம் இஸ்லாம் பெண்களுக்கு  கொடுத்துள்ளது.. அதை முஸ்லீம் பெண்களும் அனுபவித்து உள்ளார்கள். அனுபவித்தும் வருகிறார்கள்.

இவற்றிற்கு மேலாக, இந்த சுதந்திரத்தை எப்போது அனுபவிக்க துவங்கினார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு புறத்தில் பெண்கள்  மார்பு வரி கட்டிக் கொண்டிருக்கும் போது,அவர்கள் இசுலாமிய பெண்கள் தங்கள் அங்கங்களை மறைக்க உரிமை பெற்றிருந்தார்கள்.

ஒரு புறத்தில்  பெண்கள் உடன்கட்டை ஏறி கொண்டிருக்கும் போது, இசுலாமிய பெண்கள் மறுமணம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு புறத்தில்  ஆலயங்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப் படும்போது  இசுலாமிய பெண்கள்   பள்ளி வாசல்களில் பின் வரிசையில்.அணியாக தொழுது கொண்டு இறந்தனர்.

ஒரு புறத்தில் அந்தப் புறத்தில் அரசர்களுக்கு களிபூட்டிக் கொண்டிருந்த வேளையில் இசுலாமிய பெண்கள் விவாகரத்து பெறும் உரிமையை  கையில் வைத்து இருந்தார்கள்.

விபசாரம் ஒரு  பாலியல் தொழில் ஆக பரவி இருந்த கால கட்டத்தில்  இஸ்லாமிய பெண்கள் திருமணத்திற்கு மஹர் என்னும் மணக்கொடையை  பெற்று மண மகனை தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

பெண் குழந்தை பிறந்தால், கொன்று விடும் காலத்தில், குழந்தைகள் பிறந்தவுடன் அகீகா எனும் வழிமுறை கொண்டு வரப்பட்டு , அப்பாக்கள் ஆடு அறுத்து விருந்து கொடுத்து   கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அங்கே ஒரு  ஒரு  இசுலாமிய பெண் பல்கழைக் கழகத்தை கட்டி முடித்தார்.

வீட்டிற்குள்ளேயே ஒரு மூளையில் பெண்கள் முடகி கிடந்த கால கட்டத்தில் இசுலாமிய  பெண்கள் தந்தையின் சொத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த சுதந்திரத்தை எல்லாம் பெண்கள் இந்த நூற்றாண்டில் போராடி பெற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

முஸ்லீம் பெண்களுக்கு இவை எந்த வித போராட்டமும் இன்றி 1400 வருடங்களுக்கு முன்பே கிடைத்து விட்டது

ஆனால் இஸ்லாம் இன்றும்  ஆண்களாயினும்,  பெண்கள் ஆயினும் அவர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப் பட வேண்டும் என தெளிவாக வரையறை செய்துவிட்டு தெளிவாக நிற்கிறது.

இஸ்லாம் கொடுத்துள்ளது தேவையான  வரையறுக்கப்பட்ட சுதந்திரம்.

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...