உங்கள் பார்வைக்கு – அல் கய்தம்

 

உங்கள் கண்களிலிருந்து லேசர் கருவியில் வருவது போல் ஒரு ஒளி வெளியே பாய்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?.

பண்டைய அறிவியல் இப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தது.

பிற்காலங்களில் வந்த அரிஸ்டாட்டில் போன்ற ஆராய்ச்சியாளர்கள் ஒளி கண்களிலிருந்து வெளி வராமல் கண்களின் மேல் படுவதனால் தான் பார்வை உண்டாகிறது என்பதை கண்டு பிடித்தாலும் அவர்களுக்கு  அதை  உறுதிப் படுத்துவதற்கு எந்த ஆரய்ச்சி முறையோ, ஆராய்ச்சி கூடமோ அமைக்க முடியவில்லை.

ஆனால், கி. பி. எட்டாம் நூற்றாண்டில், இஸ்லாம் உருவாக்கிய அறிவியல் உலகம், அறிவியலாளர் அல் கய்தமிர்க்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கியது.

அல் கய்தம்  ஒளியியலை எளிமைப் படுத்தி,  அதன் பயன்களை எளிய மக்களுக்கும்  கொண்டு சேர்த்தார். அதற்கு அவர் செய்த சின்ன கலவை அறிவியலுடன் கணிதத்தை சரியான விகிதத்தில் கலந்ததே.

இன்று, நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் கேமரா இவருடைய உழைப்பின் பலனே.

ஒருநாள் சூரிய கிரகண நிகழ்வன்று தன்னுடைய அறையில் ஒரு சிறு துளையின் வழியே ஊடுருவிய சூரிய ஒளி சுவற்றில் கிரகண விடிவிலேயே விழுவதைக்  கண்டார். அதன் பின்னே,இருண்ட அறையில் ஊடுருவும் ஒளியானது பொருளின் பிம்பத்தை அப்படியே. பிரதி  பலிக்கும் என்ற காமெராவின் (CAMARA) சித்தாந்தத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார். அந்த இருண்ட அறைக்கு அரபியல் கமரா (QAMARA) என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. பின்னாளில் கமரா (CAMARA) மருவி  இன்று காமேராவாக பயன்படுத்தப் படுகிறது.



இன்றும், அல் கய்தமை ஒளியியலின் தந்தை என்று அறிவியல் உலகம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. 1௦௦௦ ஆண்டுகளைக் கடந்தும் இவரது புத்தகங்களை இன்னும் ஆராய்ச்சிக்கு படிப்புக்கு பயன் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கப் படுகிறது.

இவரது 1௦௦௦ மாவது வருடத்தைக் கொண்டாடும் விதமாக  யுனெஸ்கோ (UNESCO) 2015  ஆண்டை  உலக ஒளி தினமாக அறிவித்தது.`.

அடுத்த முறை ஷெல்பி எடுக்கும் போது, அக்கண்டுபிடிப்புக்கு முன்னோடியான அல் கய்தமை நினைவு கொள்வோம்.     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...