இறைத்தூதர் முஹம்மது (ஸல்) பற்றி 10 வரிகளில்.....


1. மொழி -   ஒரு மொழியை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கலயும்இ திணிக்கப்படும் மொழிக்கு எதிராக போராடு பவர்களையும் ஒரு புள்ளியில் நிறுத்தி உலகம் முழுமையும் முஸ்லீம்கள் எந்த தினிப்பும் இல்லாமல் அரபி கற்றுக் கொண்டதையும் அவ்வாறு இருந்தும் அவர்களின் தாய் மொழி எவ்விதத்திலும் அபகரிக்கப் படவில்லை என்றும் திணிப்பு இல்லாமல் தேவைக்கு  கற்றுக் கொண்ட மொழி  சகோதரத்தை உண்டாகுமே தவிர வெறுப்பை  உண்டாக்காது என்று நிரூபித்தவர்.

2.கல்வி - தனக்கு எழுதப் படிக்க தெரியாத போதும்இ பணயக் கைதியாக வந்தவரிடம் தன் படை வீரர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க சொன்னவர். கல்வி கற்பது ஒவ்வொரு இறை நம்பிக்கையான ஆண் மற்றும் பெண் மீது கடமை என்று அறிவித்தவர்.

3. நேர்மறை எண்ணம் - நீங்கள் கடைசி மனிதனாக இருந்துஇ உலகமே அழியும் சூழல் வந்தாலும் நீங்கள் இறுதியாக ஏதேனும் செய்ய எண்ணினால் ஒரு மரத்தை நடுங்கள் என்று நேர்மறை எண்ணத்தை விதைப்பவர்.

4. சுத்தம் - சுத்தமாக இருப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்றும் தண்ணீர் குடிப்பது முதல் சிறுநீர் கழிப்பது வரை அதற்கான  அழகிய நடைமுறைகளை தந்தவர்.

5. நேசம் - தன் பக்கத்து வீட்டுக்காரர் பசிதத்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவன் உண்மையான இறை நம்பிக்கை யாளன் அல்லன் என்று இறைநம்பிக்கை யின் பலனை அண்டை வீட்டுக்கும் பகிர்ந்து அளித்தவர்.

6.சம உரிமை -  மனித குலத்தில் ஊறிப்போன ஏற்றத் தாழ்வுகளை உடைத்து  அரசன் முதல் அடித்தட்டு  மக்களையும் ஒரே அணியில் நிறுத்தியவர்.

7. தொற்று நோய் - ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக அவ்வூரைவிட்டு வெளியேறாதீர்கள் என்று எப்போதோ ஒருமுறை வருகிற தொற்று நோய்க்கும் பாதுகாப்பு வழிமுறையை  வகுத்தவர்

8.பெண்களுக்கு ஆண்மா இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டு இருந்த வேளையில் அவர்களுக்கு சொத்துரிமைஇ பேச்சுரிமை மற்றும் கல்வியுரிமை  ஆகியவற்றை இறைவன் அருளால் கொண்டு சேர்த்த அகில உலக பெரியார் அவர்.

9. இவை அனைத்தையும்  சாத்தியப் படுத்தியது இறைவன் ஒருவனே என்ற கொள்கையும் தூதர் உட்பட அனைவரும் அவனது அடிமைகள் என்பதே ஆகும்

10. குர்ஆன் -  முழுமையாக இறைவனின் வார்த்தைகள். ஹதீத் -  இறைவன் கொடுத்த ஞானத்தால் நபியவர்கள் கூறிய வார்த்தைகள்.

இது இரண்டும் கலந்தது அவரின் வாழ்க்கை




No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...